ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
மலையாளத்தில் ஸ்வப்னா சஞ்சாரி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல். அதையடுத்து நிவின் பாலி நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூ என்ற படத்தில் நாயகியான அவர், பின்னர் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தெலுங்கில் அவர் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுக்கவே இப்போது அங்கு தேடப்படும் நடிகையாகி விட்டார் அனு இம்மானுவேல்.
அந்த வகையில், தற்போது பவன் கல்யாண், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர் என முன்னணி ஹீரோக்களின் படங்களாக கைப்பற்றி விட்டார். இதில் பவன் கல்யாண் நடிக்கும் படத்திற்காக ராகுல் பிரீத் சிங்கிடம் தான் முதலில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், அந்த படத்தின் இயக்குனரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ், அனு இம்மானுவேல் தனது நடிப்பினால் என்னை இம்பரஸ் செய்து விட்டார் என்று அவருக்கு சிபாரிசு செய்து அந்த படத்தில் கமிட் பண்ணி விட்டாராம்.
அதையடுத்து, தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும், துப்பறிவாளன் படத்திலும் முதலில் ராகுல்பிரீத் சிங்தான் நடிப்பதாக இருந்தது. சம்பள பிரச்னை காரணமாக, அவருக்குப்பதிலாக இப்போது அனு இம்மானு வேல் நடித்திருக்கிறார். ஆக, தமிழ், தெலுங்கில் இரண்டு மெகா படங்களை அனு இம்மானுவேலிடம் பறி கொடுத்திருக்கிறார் ராகுல்பிரீத் சிங்.