'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாகுபலி வில்லன் ராணா தற்போது நேநே ராஜூ நேநே மந்திரி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருப்பவர், மடை திறந்து, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், ஒரு படத்தை பார்த்ததும் அது வெற்றி பெறுமா? இல்லையா? என்பதை கணித்து சொல்வதில் வல்லவராம் ராணா. அவரது தாத்தா ராமா நாயுடு, தந்தை சுரேஷ் பாபு ஆகியோர் தெலுங்கில் பிரபல தயாரிப்பார்கள். அதன்காரணமாக அவர்களைப்போன்று படங்களை கணிப்பதில் வல்லவராக இருக்கிறாராம் ராணா.
அந்தவகையில், தெலுங்கில் நானி நடித்துள்ள நின்னுகோரி என்ற படம் ஜூலை 7-ந்தேதியான இன்று வெளியாகிறது. ஆனால், இந்த படத்தை சில தினங்களுக்கு முன்பே பார்த்து விட்ட ராணா, தனது டுவிட்டரில் இப்படம் வெற்றி பெறும். அப்படத்தில் நடித்துள்ள நானி உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். ராணா இதற்கு முன்பு சில படங்கள் குறிதது சொன்ன கருத்துக்கள் சரியாக இருந்ததினால், அவர் தனது படம் குறித்து சொன்ன கருத்தினால் செம உற்சாகத்தில் இருக்கிறாராம் நானி.