இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தவர் லட்சுமிராமகிருஷ்ணன். அதோடு, ஆரோகனம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களையும் இயக்கிய அவர், ஜீ தமிழ் சேனலில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். அதேசமயம் சினிமாவிலும் நல்ல வேடங்கள் கிடைத்தால் அதற்காக நேரம் ஒதுக்கி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது விழாவில் கலந்து கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன், அதே விழாவுக்கு விருது வாங்க வந்திருந்த நயன்தாராவை சந்தித்துள்ளார். இருவருக்கும் அடுத்தடுத்து இருக்கை கிடைத்ததால் நயன்தாராவுடன் ஒரு செல்பி எடுத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதை தனது டுவிட்டரில் வெளியிட்டு, நாங்கள் இருவரும் அம்மா-மகளாக நடித்தால் எப்படி இருக்கும் என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.