ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இசையமைப்பாளராக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் பின்னர் ஹிந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி விட்டார். அவரைத் தொடர்ந்து, கமலின் இளைய மகள் அக்சராஹாசன் டைரக்டர் மணிரத்னத்திடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். அதனால் அவர் இயக்குனராகி விடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரும் அமிதாப்பச்சனுடன் இணைந்து தனுஷ் நடித்த ஷமிதாப் இந்தி படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
அதையடுத்து, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். இதன்பிறகு கன்னட சினிமாவில் அறிமுகமாகிறார் அக்சராஹாசன். கன்னட நடிகர் ரவிச்சந்திரனின் மகன் விக்ரம் ரவிச்சந்திரன் நடிக்கும் புதிய படத்தில் அக்சராஹாசன் நாயகியாக நடிக்கிறார், ஆக, ஷமிதாப் படத்தில் ஹிந்தியிலும், விவேகத்தில் தமிழிலும் அறிமுகமாகியுள்ள அக்சராஹாசன், விக்ரம் ரவிச்சந்திரன் நடிக்கும் படம் மூலம் கன்னடத்திலும் அறிமுகமாகிறார்.