இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஹாலிவுட் படங்களுக்கு இசை அமைத்து வருவது போன்று அவரது கடைசி தங்கை இஷ்ரத் காதிரியும் ஹாலிவுட் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ள இஷ்ரத், அவருடன் இசை நிகழ்ச்சியிலும் பாடியுள்ளார். தற்போது இசை அமைப்பாளராகியிருக்கிறார். இதுகுறித்து இஷ்ரத் கூறியதாவது:
அண்ணனின் இசையில் பாடி வந்தேன். ஒரு நாள் அண்ணன் "இப்படி பாடுவதோடு நிறுத்தி விடாதே இசை அமைக்கவும் கற்றுக் கொள்" என்றார். அன்று முதல் இசை அமைக்க கற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில் இசை ஆல்பங்களுக்கு இசை அமைத்தேன். உயிர்கொடி உறவுகள் என்ற பெயரில் ஒரு இசை ஆல்பத்தை நானே தயாரித்து, இசை அமைத்து, பாடி உள்ளேன். இப்படி பல வழிகளில் இசை அமைப்பாளர் பயிற்சி பெற்றேன்.
கடந்த ஆண்டு அண்ணன் ஐ.நா சபையில் நடத்திய கச்சேரியில் கலந்து கொண்டு பாடினேன். அப்போது நானே இசை அமைத்த சில பாடல்களையும் பாடினேன். அதன் மூலம் லேக் ஆப் பயர் என்ற ஹாலிவுட் படத்திற்கு ஒரு பாடலுக்கு இசை அமைக்க கேட்டனர். அதை செய்து கொடுத்தேன். அது அவர்களுக்கு பிடித்துவிடவே படத்தின் ஒரு பகுதிக்கு பின்னணி இசை அமைக்க கேட்டனர். அதையும் செய்து கொடுத்தேன்.
தமிழ் படங்களில் இசை அமைப்பாளராக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. இதற்காக நல்ல கதைகள் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அறிமுகமாகிற முதல் படமே நல்லவிதமாக அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இனி படங்களுக்கு இசை அமைக்கவும், பாடல்கள் பாடவும் முடிவு செய்திருக்கிறேன். என்றார்.