ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்கும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசர், சர்வைவா பாடல் ஆகியவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஹிந்தி நடிகரான விவேக் ஓபராய் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது இன்னும் சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது. முற்றிலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடித்ததைப் பற்றி விவேக் ஓபராய் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
“விவேகம் குழுவினர், இயக்குனர் சிவா, அஜித் அண்ணா ஆகியோருடன் பணி புரிந்தது, வியக்கத்தக்க, மறக்க முடியாத ஒரு அனுபவம். தல ரசிகர்களே கவுண்ட்-டவுன் ஆரம்பமாகிவிட்டது,” என விவேக் ஓபராய் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.