Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் சேதுபதியிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது!: மாதவன்

07 ஜூலை, 2017 - 07:38 IST
எழுத்தின் அளவு:
From-Vijaysethupathi-we-can-learn-Lot-of-information-says-Madhavan

இறுதிச்சுற்று படத்துக்கு பின், மாதவன் நடித்த படம், விக்ரம் வேதா. இந்த படத்தை, புஷ்கர் - காயத்ரி (கணவன் - மனைவி) இயக்கியிருப்பது ஒரு சிறப்பு என்றால், இதில், விஜய் சேதுபதியுடன், மாதவன் இணைந்து நடித்திருப்பது, மற்றொரு சிறப்பு. இனி, மாதவனுடன் பேசலாம்.

விக்ரம் வேதா படம் பற்றி...?


விக்ரமாதித்தன் கதையில் இருந்து ஒரு, லைன் எடுத்து, இந்த படத்துக்கான கதையை வடிவமைத்துள்ளதாக கூறலாம். விக்ரம் என்ற என்கவுண்டர் போலீஸ் வேடத்தில் நான் நடிக்கிறேன். வேதா என்ற ரவுடி வேடத்தில், விஜய் சேதுபதி நடிக்கிறார். ஆயுத எழுத்து படத்தில் சூர்யா, சித்தார்த்துடன் இணைந்து நடித்திருக்கேன். எங்களுக்குள் எந்த பொறாமையும் இல்லை. இதில் நடித்தது, நல்ல அனுபவம்.


இறுதிச்சுற்று படத்தில் சுதா, விக்ரம் வேதாவில், காயத்ரி என, பெண் இயக்குனர்களின் படங்களில் நடிப்பது குறித்து...?


அவர்களை, நான், பெண்களாக பார்க்கவில்லை; இயக்குனர்களாகத் தான் பார்க்கிறேன். பெண்கள் என்பதற்காக, அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. ஆண் இயக்குனர்களை விட, ரொம்ப கடுமையாக, வேகமாக வேலை பார்ப்பவர், சுதா. காய்த்ரி, அமைதியாக வேலை வாங்குவார். இருவருமே, படு திறமைசாலிகள்.


விஜய் சேதுபதி பற்றி?


அடுத்த கட்டத்துக்கு என்ன மாதிரி போக வேண்டும் என்பதை மனதுக்குள் நினைத்து, அதற்கு தகுந்தாற்போல், கதைகளை தேர்வு செய்கிறார். வசனங்களை ரொம்ப எளிமையாக பேசிட்டு போயிடுறார். சொல்ல வேண்டிய விஷயத்தை, உடல் மொழிகளாலேயே காட்டி விடுகிறார். சொல்லப் போனால், விஜய் சேதுபதியிடம், நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.படப்பிடிப்பின் போது, ரசிகர்களிடம் பேசுவது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது, அவர்கள் தரும் உணவை சாப்பிடுவது என, ஒரு பந்தத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். இதுபோன்ற விஷயங்களை, அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.


சம்பளம் அதிகரிக்கவில்லை என்ற வருத்தம் உள்ளதா?


வருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால், திரைத்துறையில், நான் ஒரு பணக்கார நடிகர் என்ற நம்பிக்கை இருக்கிறது. போகும் இடமெல்லாம், பாராட்டும், மரியாதையும் கிடைக்கிறது. எனக்கு இருக்கும் திறமைக்கு, ஆண்டுக்கு, ஒரு படமோ, இரண்டு படமோ தான் நடிக்க முடியும். வாழ்க்கைக்கு என்ன வேண்டுமோ, அது கிடைக்கிறது; இதற்கு மேல், வேறு என்ன வேண்டும்?


எந்த மொழி படங்களுக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள்?


சினிமா மட்டும் தான் என் வாழ்க்கை. எந்த மொழியில் பேசுகிறேன், எந்த மொழியில் நடிக்கிறேன், எதுவும் பார்க்க மாட்டேன். நான் ரொம்ப கொடுத்து வைத்தவன். வாய்ப்பு கிடைக்கும் வரை நடித்துக் கொண்டிருப்பேன். மற்றபடி மொழிகளை பார்ப்பதில்லை.


சாக்லேட் பாய் இமேஜை உடைத்து, படங்கள் பண்ண முடியாதா?


அலைபாயுதே படத்தில் நடித்ததால், வந்த இமேஜ் அது. ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பின் காரணமாகவே, 48 வயதிலும் நடிக்கிறேன். எல்லா படத்திலும் இமேஜ் மாறாமல், நடித்து கொடுப்பதை விட, வேறு வேறு கோணத்தில் என்னை காட்ட வேண்டும் என விரும்புகிறேன்.


மணிரத்னம் பற்றி சொல்லுங்களேன்?


அவர், எனக்கு, காட்பாதர் மாதிரி. எனக்கு சரியான பாதை போட்டவர். அவரைப் போல், உலகத்தில் யாருமே கிடையாது. வித்தியாசமான கதைகளை கொடுத்தவர். மவுனராகம், தளபதி, நாயகன், அஞ்சலி, ஆயுத எழுத்து என, பல வித்தியாசமான படங்களை கொடுத்தவர். அவரைப் போல், எந்த இயக்குனரும் இல்லை என்று சொல்வேன்.


Advertisement
விவேகத்தில் வில்லன் யார்?விவேகத்தில் வில்லன் யார்? சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சமந்தா சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Kanmani Pappa
  • கண்மணி பாப்பா
  • நடிகர் : தமன் குமார்
  • நடிகை : மியா ஸ்ரீ
  • இயக்குனர் :ஸ்ரீமணி
  Tamil New Film Abhiyum Anuvum
  • அபியும் அனுவும்
  • நடிகர் : டொவினோ தாமஸ்
  • நடிகை : பியா பாஜ்பாய்
  • இயக்குனர் :பிஆர் விஜயலட்சுமி
  Tamil New Film Pandimuni
  • பாண்டிமுனி
  • நடிகை : நிகிஷா பட்டேல்
  • இயக்குனர் :கஸ்தூரி ராஜா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in