‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாவனா தொடர்பான விவகாரத்தில் பதிலளிக்கப்போய், இன்னொரு சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார் மலையாள நடிகர் சங்க தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான, நடிகர் இன்னொசன்ட். சமீபத்தில் நடந்து முடிந்த நடிகர் சங்க பொதுக்குழுவை அடுத்து பத்திரிகையாளர்கள் கூட்டத்தை கூட்டிய இன்னொசன்ட், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது நிருபர் ஒருவர், நடிகை பார்வதி (மேனன்), சில மாதங்களுக்கு முன்பு வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு கூட அழைத்தார்கள் என்று குற்றம் சாட்டினாரே அது குறித்து உங்கள் பதில் என்ன என கேள்வி எழுப்பினார்.
“அதெல்லாம் முடிந்துபோன விஷயம்.. ஒருகாலத்தில் இருந்ததோ என்ன்னவோ, இப்போது இண்டஸ்ட்ரி சுத்தமாக இருக்கிறது” என கூறியதோடு நடிகர் இன்னொசன்ட் விட்டிருக்கலாம். ஆனால் “ஒரு சில மோசமான பெண்கள் வாய்ப்புக்காக அப்படி செய்திருக்கலாம்” என்றும் ஒரு வார்த்தையையும் சேர்த்து கூறி அதிரவைத்தார்.
இதை தொடர்ந்து அவருக்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் வர ஆரம்பிக்கவே, “நான் அப்படி சொல்லவில்லை.. நான் சொன்னவற்றை திரித்து மாற்றிவிட்டார்கள்” என பல்டி அடித்தார்.
இயக்குனர் வினயன் இதுகுறித்து வெளிப்படுத்திய கண்டனத்தில், “மிஸ்டர் இன்னொசன்ட்.. நீங்கள் நடிகர் சங்க தலைவர் மட்டுமல்ல.. மக்களின் பிரதிநிதியும் கூட.. வார்த்தைகளை கவனமாக பேசுங்கள்” என எச்சரித்துள்ளார்.