மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஜெயம் ரவியின் கேரியரில் அவர் கொடுத்த வெற்றிப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு குறைவான வெற்றிப்படங்களை கொடுத்தவர் ஜெயம்ரவி. அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்று... 'தனி ஒருவன்'.
அர்விந்த் சாமியின் ரீஎன்ட்ரி படமாகவும் அமைந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தனி ஒருவன் படத்தை தெலுங்கில் 'துருவா' என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர்.
ராம் சரண் தேஜா, அர்விந்த் சாமி, ராகுல் ப்ரீத் சிங் நடித்த இப்படம் தெலுங்கிலும் வெற்றியைப் பெற்றது. தெலுங்கைத் தொடர்ந்து ஹிந்தியிலும் 'தனி ஒருவன்' படத்தை ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. அந்த செய்தி அதிகாரப்பூர்வமாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, ஜெயம் ரவி நடித்த வேடத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்க இருக்கிறார். அர்விந்த் சாமி நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் கபூர் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சபீர் கான் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகிறது.