வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழில் போணியாகாத ஹீரோக்களில் அசோக் செல்வன் ஒருவர். பீட்சா-2, தெகிடி, 144, ஆரஞ்சமிட்டாய், சவாலே சமாளி என அசோக் செல்வன் நடித்த எந்தப்படமும் ஓடவில்லை. தற்போது அவர் நடித்து வரும் 'கூட்டத்தில் ஒருத்தன்', 'சில சமயங்களில்' படங்களும் முடிந்து பல மாதங்களாகிவிட்டது.
இந்த இரண்டு படங்களும் பிசினஸ் ஆகாமல் வருடக்கணக்கில் முடங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க அசோக் செல்வனை கமிட் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி மூன்று படங்களை இயக்கியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த மூன்று படங்களுமே கமர்ஷியலாக ஓடவில்லை. எனவே ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஹிந்தி மீடியம்' என்ற படத்தின் ரீ-மேக்கை தன்னுடைய அடுத்தப் படமாக இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.