ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான பிறகு ஹிந்திக்கு சென்ற டாப்சி இப்போது அங்கு முன்னணி நடிகையாகி விட்டார். அவர் ஹிந்தியில் கதையின் நாயகியாக நடித்த நான் சபானா படம் தமிழில் டப் செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. மேலும், தெலுங்கில் ராணாவுடன் காஸி அட்டாக் படத்தில் நடித்த டாப்சி, தற்போது ஆனந்தோ பிரம்மா என்ற ஹாரர் காமெடி படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
மேலும், இந்த படத்தில் டாப்சியுடன் இணைந்து ஸ்ரீனிவாசரெட்டி, தாகுபூத்து ரமேஷ், ஷகலாக்கா சங்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மஹிராகவ் இயக்கியுள்ள இந்த படம் ஆகஸ்டு 18-ந்தேதி திரைக்கு வருகிறது. சமீபகாலமாக டாப்சி, ஹிந்தியில் நடித்து வரும் அழுத்தமான கதாபாத்திரங்கள் தான் அவருக்கு இந்த படத்தில் கதையின் நாயகி வாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளதாம். தற்போது ஹிந்தியில் டாப்சிக்கு மார்க்கெட் இருப்பதால் இந்த ஆனந்தோ பிரம்மா ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்படுகிறதாம்.