ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மெட்ராஸ் படத்தில் தமிழுக்கு வந்தவர் கேத்ரின் தெரசா. முதல் படமே ஹிட்டாக அமைந்ததால் அதையடுத்து கதகளி, கணிதன், கடம்பன் என நடித்த அவர், தற்போது கதாநாயகன் படத்தில் நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் நடித்த சாரைனோடு படத்தை அடுத்து ராணாவுடன் நினே ராஜூ நீனே மந்திரி படத்திலும், கோபிசந்துடன் கெளதம் நந்தா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தெலுங்கில் நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அடுத்தபடியாக சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார் கேத்ரின் தெரசா. இந்த நேரத்தில், இதற்கு முன்பு ருத்ரமாதேவி உள்ளிட்ட சில படங்களில் அவர் ஒத்த பாட்டுக்கு நடனமாடியதை முன்வைத்து ஜெய ஜானகி நயகா என்ற படத்திலும் ஒரு பாட்டுக்கு நடனமாட அவரை அணுகியுள்ளனர். அவர்களிடத்தில் பாட்டுக்கு குத்தாட்டமாட சம்மதம் சொன்ன கேத்ரின் தெரசா, இனி இதுபோன்று ஒரு பாட்டுக்கு ஆட கூடாது என்று முடிவு எடுத்துள்ளார்.