'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் இரண்டே படங்களுடன் நிறுத்திக்கொண்ட சாய் பல்லவி, தற்போது தமிழில் 'கரு' என்கிற படத்திலும் தெலுங்கில் 'பிடா' என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இதில் 'பிடா' படத்தில் நாயகன் வருண் தேஜுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஜூலை-10ஆம் தேதி நடக்கவுள்ளது. வரும் ஜூலை-21ஆம் தேதி படம் ரிலீஸாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிலீஸுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்தப்படத்தின் சில காட்சிகளை ரீ சூட் செய்திருக்கிறார் இயக்குனர் சேகர் கம்முலா.. இப்படி ரிலீஸ் தேதியை பக்கத்தில் வைத்துக்கொண்டு அரிபரியாக காட்சிகளை ரீஷூட் செய்ய காரணம் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தானாம். மொத்தப்படத்தையும் எடிட் செய்து பார்த்த பிறகு சில காட்சிகளை மாற்றும்படி தில் ராஜூ சொன்னதால் வேறு வழியின்றி சில காட்சிகளை மட்டும் ரீஷூட் செய்து, தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறாராம் சேகர் கம்முலா.