தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சின்னத்திரை தொகுப்பாளர், ரேடியோ ஜாக்கி என மீடியாக்களில் பல வேலைகள் செய்து விட்டு காமெடி நடிகர் ஆனவர் டேனியல் ஆனி போப். பொல்லாதவன், பையா, ரவுத்திரம் படங்களில் நடித்தவருக்கு இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா நல்ல பிரேக் கொடுத்தது. "சார் லவ் பெயிலியரு அதான் பீலாயிட்டாப்ல ஆப் அடிச்சா சரியாயிடும்" என்ற வசனத்தால் அறியப்பட்டார்.
அதன் பிறகு பல படங்களில் நடிக்கத் தொடங்கினார் விஜய்யுடன் நடித்த தெறி, சமீபத்தில் வெளியான மரகத நாணயம், ரங்கூன் படங்கள் அவருக்கு பெரிய பலமாக அமைந்தது. தற்போது திட்டம் போட்டு திருடுற கூட்டம், காத்தாடி, ஆயிரத்தில் இருவர், வட சென்னை, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படங்களில் நடித்து வருகிறார்.
டேனியலும் விரைவில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்ல இருக்கிறார். கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வந்த தெனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். டேனியல் பட வாய்ப்பு தேடி அலைந்து சிரமப்பட்ட காலத்தில் அவருக்கு உதவியாக, பலமாக இருந்தவர் தெனிஷா. அதனால் காதல் ரொம்ப ஸ்டிராங். இரு குடும்பமும் காதலுக்கு தடையாக இல்லாததால் விரைவில் திருமண தேதியை அறிவிக்க இருக்கிறார் டேனியல்.