ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ள மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த படங்களுக்கான பிரிவில் தமிழ்த் திரைப்படமான 'ஜோக்கர்' போட்டியிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் மற்ற இந்தியத் திரைப்படங்களான “பின்க், சுல்தான், ஏ தில் ஹை முஷ்கில், எம்.எஸ். தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி'' ஆகியவை போட்டியிடுகின்றன.
சிறந்த நடிகர்களுக்கான போட்டியில் அமிதாப்பச்சன், ராஜ்குமார் ராவ், சுஷாந்த் சிங் ராஜ்புத், ஹிருத்திக் ரோஷன், லலித் பெஹ்ல், அடில் ஹுசைன், ஆமீர்கான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். சிறந்த நடிகைகளுக்கான போட்டியில் ஆலியா பட், வித்யா பாலன், தன்னிஷ்டா சாட்டர்ஜி, காவ்யா மாதவன், ரத்னா பதக் ஷா, கொன்கொனா சென் ஷர்மா ஆகியோர் உள்ளார்கள்.
சிறந்த இயக்குனருக்கான போட்டியில் நிகில் மஞ்சு, நிதிஷ் திவாரி, விக்ரமாதித்ய மோட்வானி, என். பத்மகுமார், புத்ததேப் தாஸ்குப்தா, அலன்கிரிடா ஸ்ரீவத்சவா, கொன்கொனா சென் ஷர்மா, எஸ்.எஸ். ராஜமௌலி ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
மக்களின் தேர்வுப் பிரிவில் 'தங்கல், பாகுபலி 2' ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த திரைப்பட விழாவில் இந்தியத் திரையுலக நட்சத்திரங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளார்கள்.