வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஸ்ரீதேவி கடைசியாக நடித்து வெளிவந்த ஹிந்திப் படம் 'இங்கிலீஷ் விங்கிலீஷ்'. இந்தப் படம் வெளிவந்து சுமார் நான்கரை ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இடையில் 'புலி' தமிழ்ப் படத்தில் மட்டும் ஸ்ரீதேவி நடித்தார்.
'மாம்' படத்தை தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். அதன் பிரமோஷனுக்காக ஸ்ரீதேவி ஐதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். கோல்கட்டா, டில்லி உள்ளிட்ட மற்ற இடங்களுக்கும் சென்று ஸ்ரீதேவி படத்தைப் பற்றிப் பேசினார். அவருடைய கணவர் போனி கபூரின் சொந்தத் தயாரிப்பு என்பதால் ஸ்ரீதேவி இந்தப் படத்திற்காக நிறைய பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டார்.
படம் பெரிய வெற்றியைப் பெற மும்பையில் உள்ள புகழ் பெற்ற சித்தி வினாயகர் கோவிலிலும் ஸ்ரீதேவி பிரார்த்தனை செய்துள்ளார். 'மாம்' படம் நாளை மறுநாள் 7ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் தியேட்டர்கள் ஸ்டிரைக்கில் உள்ளதால் இங்கு படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.