ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஸ்ருதிஹாசன் நடித்து கடைசியாக வெளிவந்த படங்கள் அனைத்துமே தோல்விப் படங்களாக அமைந்தது. அதன் காரணமாக அவரை அடுத்து யாரும் தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய முன் வரவில்லை. இதனால் கை வசம் படங்கள் எதுவும் இல்லாமல் தவிக்கிறார் ஸ்ருதிஹாசன்.
தெலுங்கிலாவது அவ்வப்போது ஹிட் படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கை விட ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுத்த ஸ்ருதிஹாசன் அங்கும் சரியான படங்களைத் தேர்வு செய்யாததால் நினைத்தபடி முன்னணி இடத்தைப் பிடிக்க முடியவில்லை. தெலுங்கில் மிகவும் கிளாமராக நடித்திருந்தாலும் இப்போதைய தெலுங்கு ஹீரோக்கள், இளம் ஹீரோயின்களைத்தான் அவர்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களாம். அதனால், 30 வயதைக் கடந்த ஸ்ருதிஹாசன் தற்போது சீனியர் நடிகைகள் பட்டியலில் இணைந்துவிட்டார்.
அவர் கைவசம் தற்போது அவரது அப்பா இயக்கத்தில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள 'சபாஷ் நாயுடு' படம் மட்டுமே இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் மீண்டும் எப்போது ஆரம்பமாகும் என்று தெரியாது. கமல்ஹாசன் தற்போது 'பிக் பாஸ்' படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.