10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு |
வேலைக்காரன் படத்தை ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியிடவிருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் - மகேஷ்பாபுவின் கூட்டணியில் தயாராகியுள்ள 'ஸ்பைடர்' படத்தையும் ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜோதிகாவை வைத்து பாலா இயக்கும் நாச்சியார் படமும் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கிய ஜோதிகா, '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎன்ட்ரி தந்தார்.
தற்போது 'மகளிர் மட்டும்' படத்தில் நடித்து முடித்துள்ள ஜோதிகா பாலாவின் இயக்கத்தில் முதல்முறையாக 'நாச்சியார்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப்படத்தில் முக்கிய வேடமொன்றில் ஜி.வி.பிரகாஷும் நடிக்கிறார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விரைவில் இப்படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து போஸ்ட் புரடக்ஷன் தொடங்க உள்ளதாகவும் தகவல். ஏற்கெனவே சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்துக்கு ஸ்பைடர் போட்டியாக களத்தில் குதிக்க உள்ள நிலையில் தற்போது நாச்சியார் படமும் அதே தேதியில் ரிலீஸாக உள்ளது.
இதனால், வேலைக்காரன் படத்துக்கு 300 தியேட்டர்களுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.