சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
'புலி முருகன்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை இயக்கியவர் வைசாக். அடுத்ததாக இவர் இயக்கும் புதிய படம் பற்றி பலவிதமான செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் மம்முட்டியை வைத்து அவர் தனது அடுத்த படத்தை இயக்க இருப்பது. ஏற்கனவே தனது 'போக்கிரி ராஜா' படம் மூலம் வைசாக்கை இயக்குனராக்கியவர் மம்முட்டிதான். மீண்டும் மம்முட்டி-வைசாக் கூட்டணி இணைவது உறுதிதான் என்றாலும் அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்பதால் அடுத்ததாக நிவின்பாலியை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறாராம் வைசாக்.
இந்தப்படம் போலீஸ் ஸ்டோரியாக உருவாக இருக்கிறதாம். ஏற்கனவே 'ஆக்சன் ஹீரோ பைஜூ' படத்தில் முதன்முதலாக போலீசாக நடித்த நிவின்பாலி மீண்டும் இந்தப்படத்திற்காக காக்கி யூனிபார்ம் அணிகிறார். அதேசமயம் 'ஆக்சன் ஹீரோ பைஜூ' போல எதார்த்தமான ஒரு போலீஸ்காரனின் கதையாக இல்லாமல், ஒரு அதிரடி போலீஸ் அதிகாரியின் கதையாக இந்தப்படம் உருவாக இருக்கிறதாம்.