ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சல்மான் கான் இரண்டு வேடங்களில் நடித்து வெற்றி பெற்ற படம் ஜூட்வா. தற்போது இதன் இரண்டாம் பாகம் ஜூட்வா 2 என்ற பெயரில் உருவாகிறது. வருண் தவான் இரண் வேடங்களில் நடிக்க இவருடன் டாப்சி, ஜாக்குலின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப்படத்தில் நடிகர் சல்மானும் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக முன்பு செய்தி வெளியானது. ஆனால் இதை சல்மான் கானே மறுத்தார். இந்நிலையில் நடிகை டாப்சி, ஜூட்வா-2வில் சல்மானும் நடிக்கிறார் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து டாப்சி கூறியிருப்பதாவது... "சல்மான் உடன் நடிக்க நாங்கள் அனைவரும் ஆவலாய் உள்ளோம். சல்மான் நடித்த ஜூட்வா படத்தை பார்த்துள்ளேன், அருமையான படம். இரண்டாம் பாகத்தில் நானும் நடிப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது" என்று கூறியுள்ளார்.
ஜூட்வா 2 படத்தை டேவிட் தவான் இயக்க, சாஜித் தயாரிக்கிறார். இப்படம் இந்தாண்டு செப்., 29-ம் தேதி ரிலீஸாக உள்ளது.