ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரேமம் படம் மூலம் புகழ்பெற்றவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். தமிழிலும் நேரம் என்ற படத்தை இவர் தான் இயக்கினார். தற்போது இசையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் அல்போன்ஸ் புத்ரன் தனது பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு செய்தி பரபரப்பாகி உள்ளது. அப்படி என்ன சொன்னார்...?
அதாவது, "முதல்வன் படத்தில் வருவது போன்று ஒரு நாள் முதல்வராக தமிழகத்தில் ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைக்குமானால், ஒருநாள் முதல்வராக கமல்ஹாசனை நியமிக்க வேண்டும். அந்த ஒருநாள் போதும் தன்னுடைய புதுமையான யோசனைகளால் தமிழக அரசை அடுத்தக்கட்டத்திற்கு நிச்சயம் கொண்டு செல்வார். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் தான். இதில் ஏதேனும் தவறு இருந்தால் இந்த குழந்தையை மன்னியுங்கள்" என்று கூறியுள்ளார்.