பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் முறைப்படி விவாகரத்து பெற்றார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது இளைய மகள் சவுந்தர்யா. சவுந்தர்யாவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வின் ராம்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
சவுந்தர்யா தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல மாதங்களாக தனியாக வசித்து வந்தார். இருவரையும் சமாதானம் செய்ய இருவீட்டாரும் முயற்சித்து வந்தனர். ஆனால் அது பலனளிக்கவில்லை.
இந்நிலையில் சவுந்தர்யா, விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் மனு தாக்கல் செய்தார். அதேப்போன்று அஸ்வினும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சவுந்தர்யா மற்றும் அஸ்வின் இருவரும் நேரில் ஆஜராகி தங்களது விளக்கத்தை கொடுத்தனர். இருதரப்பு விளக்கத்தையும் ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தீர்ப்பை ஜூலை 4-ம் தேதி வழங்குவதாக கூறியிருந்தது. அதன்படி, சவுந்தர்யா - அஸ்வின் இருவருக்கும் சட்டப்படி விவாகரத்து அளித்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று(ஜூலை 4) தீர்ப்பளித்தது.