இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப்படம் - ஸ்பைடர். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கும், இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஸ்பைடர் படத்தின் படப்பிடிப்பு 95 சதவிகிதம் முடிந்துவிட்டது. இன்னும் 2 பாடல்கள் மட்டுமே எடுக்க வேண்டியதுள்ளது. ஜூலை 5 முதல் ஐதராபாத்தில் போடப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் ஒரு பாடல் காட்சியை எடுக்கவுள்ளார்கள். மற்றொரு பாடலை இம்மாத இறுதியில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழிலும் உருவாகி வரும் ஸ்பைடர் படம் வேலைக்காரன் படத்துக்குப் போட்டியாக செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகும் என செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், 2 நாட்கள் முன்னதாக அதாவது செப்டம்பர் 27-ஆம் தேதியே ஸ்பைடர் படம் திரைக்கு வரும் என தயாரிப்பாளர்கள் என்.வி.பிரசாத் மற்றும் தாகூர் மது உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக வேலைக்காரன் படத்துக்கான நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.