Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நம்பமுடியாதபடி எடையை குறைத்த பிருத்விராஜ்..!

04 ஜூலை, 2017 - 17:49 IST
எழுத்தின் அளவு:
Prithviraj-reduce-his-weight

பிருத்விராஜ் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் 'விமானம்'. இது ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து உருவாக இருக்கும் படம். ஆம்.. சில வருடங்களுக்கு முன் கேரளாவில் பரப்பரப்பான செய்திகளில் இடம்பிடித்தவர் தான் ஷாஜி தாமஸ்.. வாய் பேசமுடியாத, கேட்கும் திறனையும் இழந்த, ஏழாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை கைவிட்ட இந்த ஷாஜி என்பவர் தனது விடாமுயற்சியால் மரக்கட்டைகளையும் பைக் இஞ்சினையும் வைத்து விமானம் ஒன்றை உருவாக்கி பறக்க வைத்தார்.

அந்த ஷாஜியின் கதைதான் இப்போது பிருத்விராஜ் நடிக்கும் 'விமானம்' அக மாறியுள்ளது. பத்திரிகையாளரான பிரதீப் எம்.நாயர் என்பவர் இந்த ஷாஜியின் வாழ்க்கை வரலாற்றை அலசி, அதில் சினிமாவுக்கான கமர்ஷியல் விஷங்களையும் கோர்த்து அழகான திரைக்கதையாக மாற்றியுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இந்தப்படத்திற்காக ஒரிஜினல் ஷாஜியையே வரவழைத்து மூன்று குட்டி விமானங்களை தயாரிக்கும் பொறுப்பையும் வழங்கியுள்ளார்கள்.

ஷாஜி தவிர சில ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்தப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது இந்தப்படத்தில் நடிப்பதற்காக பிருத்விராஜ் தனது உடல் எடையை வெகு கணிசமாக குறைத்திருக்கிறார். சமீபத்தில் துவங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த பிருத்விராஜை பார்த்து கூடி நின்றிருந்த ரசிகர்களே ஆச்சர்யப்படும் அளவுக்கு உடல் மெலிந்து காட்சியளிக்கிறார் பிருத்விராஜ்.

ஐ படத்தில் விக்ரம் தனது உடல் எடையை குறைத்தது போன்று பிருத்விராஜூம் தனது உடல் எடையை குறைத்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in