தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் முதன்முறையாக கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் நிகழ்ச்சி போய் கொண்டு இருக்கிறது. 15 பேர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி ஒருவாரத்தை கடந்துவிட்ட நிலையில், முதல்வார முடிவில் ஸ்ரீ மற்றும் அனுயா வெளியேறிவிட்டனர். சமூக வலைதளங்களில் பிக்பாஸிற்கு கடும் விமர்சனங்கள் வந்த போதிலும், அதை எல்லாம் தாண்டி பிக்பாஸ் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனக்கும் பிக்பாஸில் பங்கேற்க அழைப்பு வந்ததாகவும், ஆனால் தான் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "என்னால் குடும்பத்தை விட்டு இருக்க முடியாது, நான் இப்போது ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறேன், அதோடு படங்களிலும் கமிட்டாகி வருகிறேன். அவர்களிடத்தில் ஒருவரை நடிக்க அழைக்கும் முன் அவரின் குடும்ப பின்னணி என்ன என்று பார்க்க மாட்டீர்களா... ரூ.10 கோடி கொடுத்தாலும் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன்" என்கிறார்.