ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாகசைதன்யா நடிப்பில் கடந்த மே 26-ந்தேதி வெளியான படம் ராரண்டாய் வேதுக சுதம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராகுல்பிரித்சிங் நடித்திருந்தார். அவரது தந்தையான நடிகர் நாகார்ஜூனாவே படத்தை தயாரித்தார். இதையடுத்து கிருஷ்ணா ஆர்.வி.மாரிமுத்து என்ற புதியவர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் நாகசைதன்யா. அப்படம் குறித்த டைட்டீல் மற்றும் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியிருக்கிறது.
இந்த படத்திற்கு யுத்தம் சரணம் என்று டைட்டீல் வைத்துள்ளனர். இதற்கு முன்பு நாகசைதன்யா நடித்த படங்கள் எல்லாமே ரொமான்ஸ் மற்றும் காமெடி கதைகளிலேயே உருவாகி வந்தன. ஆனால் இந்த படம் ஆக்சன் திரில்லர் கதையில் தயாராகிறது. அதன்காரணமாகவே யுத்தம் சரணம் என்று அதிரடி டைட்டீலை வைத்துள்ளனர்.
நாகசைதன்யா இப்படியொரு சக்திவாய்ந்த டைட்டீலில் நடிக்கும் செய்தி வெளியாகியிருப்பது தெலுங்குப்பட வட்டாரத்தில் திடீர் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்க, நடிகை ரேவதி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார்.