ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகராக மட்டுமல்லாது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் அஜய் தேவ்கன். இவர், சஞ்சய் தத் மற்றும் பர்கான் அக்தரை கொண்டு படம் இயக்க உள்ளார். இப்படத்தை நிஷிகாந்த் காமத் இயக்குவார் என தெரிகிறது. தற்போது இதுதொடர்பான பேச்சுவார்தை நடந்து வருகிறது. அது எல்லாம் சுமூகமாக முடியும் பட்சத்தில் அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். அஜய் தனது பட தயாரிப்பு நிறுவனத்தை விரிவுப்படுத்தும் விதமாகவும், நிறைய படங்களை மேற்கொண்டு தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் இப்போது சஞ்சய்-பர்கானை கொண்டு ஒரு பிரமாண்ட படத்தை தயாரிக்க உள்ளார் என பாலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்.