ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2001ல் ஸ்டூடன்ட் நம்பர்-1 தெலுங்கு படம் மூலம் இயக்குனரானவர் ராஜமவுலி. அதையடுத்து பல படங்களை இயக்கியவர், மகதீரா படத்திற்கு பிறகு பேசப்படும் இயக்குனரானார். அதையடுத்து நான் ஈ, பாகுபலி படங்களை இயக்கி தற்போது இந்திய அளவில் பேசப்படும் இயக்குனராகி விட்டார். இப்படி அவர் இயக்கிய பல படங்கள் தெலுங்கு, தமிழில் நேரடியாக தயாரானபோதும், இந்தி, மலையாளத்தில் சில படங்கள் ரீ-மேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றிருக்கின்றன.
இந்தநிலையில், 2009ல் ராம்சரண் - காஜல் அகர்வாலை ஜோடி சேர்த்து ராஜமவுலி, இயக்கிய மகதீரா படம் இந்தி மொழியில் டப் செய்யப்பட்டு யுடியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதை இதுவரை 100 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். ஒரு டப்பிங் படத்திற்கு இதுவரை இந்த அளவுக்கு பொரிய அங்கீகாரம் கிடைத்ததில்லையாம். அந்த வகையில், டப்பிங் பட பட்டியலில் இந்த மகதீரா ரெக்கார்ட் பிரேக் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.