டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
எத்தனை வெற்றிப்படம் கொடுத்த இயக்குநராக இருந்தாலும் கடைசியாக அவர் இயக்கிய படத்தின் வெற்றி தோல்வி தான் தலைவிதியை நிர்ணயிக்கிறது. மைனா, கும்கி என வெற்றிப்படங்களைக் கொடுத்த பிரபு சாலமன் அடுத்து இயக்கிய கயல், தொடரி படங்கள் படு தோல்வியடைந்தன.
குறிப்பாக தொடரி படத்தின் தோல்வி பிரபுசாலமனின் கேரியரை பதம் பார்த்துவிட்டது. ஒருகாலத்தில் அவரது இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டிய முன்னணி இயக்குநர்கள் இப்போது தலைதெறிக்க ஓட்டம் எடுக்கிறார்கள். விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் கும்கி.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் பிரபு சாலமன். இந்த படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபுவே நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் கும்கி-2 படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் விக்ரம் பிரபு. எனவே முற்றிலும் புதுமுகங்களை வைத்து கும்கி-2 படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் பிரபு சாலமன்.
கிட்டத்தட்ட இந்த படத்திற்கான நடிகர் நடிகைகளின் தேர்வு, லொகேஷன் தேர்வு முதலான வேலைகள் முடிந்துவிட்டன என்றும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளராம் பிரபு சாலமன்.