சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
நேனு லோக்கல் படத்தைத் தொடர்ந்து நானி, நாயகனாக நடித்துள்ள படம் நின்னுகோரி. ரொமான்டிக் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை புதுமுக இயக்குனர் சிவா நிர்வனா இயக்கியுள்ளார். இப்படத்தில் நானிக்கு ஜோடியாக பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்த நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இதற்கு முன்பு நானி நடித்த படங்களை விட இந்த படம் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது. அதோடு, இந்த படத்தில் வித்தியாசமான நடன அசைவுகளை வெளிப்படுத்தியுள்ள நானி, தனது குரலில் ஒரு பாடலும் பாடியிருக்கிறார்.
மேலும், இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், வருகிற ஜூலை 7-ந் தேதி நின்னுகோரி படம் ஆந்திரா, தெலுங்கானா மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் வெளியாகிறது. அந்த வகையில், அமரிக்காவில் உட்பட வெளிநாடுகளில் சுமார் 500 தியேட்டர்களில் படம் வெளியாக உள்ளது.