Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நகுலுக்கு உதவி செய்வாரா பிரம்மா

03 ஜூலை, 2017 - 11:50 IST
எழுத்தின் அளவு:
Did-Bramma-will-help-to-Nakul.?

நடிகை தேவயானியின் தம்பி நகுல். பாய்ஸ் படத்தில் குண்டு பையனாக அறிமுகமானவர். பல வருட இடைவெளிக்கு பிறகு காதலில் விழுந்தேன் படத்தில் திடீரென ஸ்லிம்மாக மாறி ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது.

அதன் பிறகு அவர் நடித்த மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்கள் பரவலாக பேசப்பட்டாலும் அடுத்து வந்த நாரதன் படம் அவரை மீண்டும் கீழே தள்ளியது. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சில காலம் விலகி இருந்தவர். இப்போது பிரம்மா.காம் என்ற படத்தின் மூலம் மீண்டும் வருகிறார்.

இதில் ஆஸ்னா ஜவேரி, கே பாக்யராஜ், கௌசல்யா, நீது சந்திரா, சோனா, உபாசனா, நான் கடவுள் ராஜேந்திரன், ஜெகன், சித்தார்த் விபின், பிரேம ப்ரியா, ஸ்ரீராம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புருஷ் விஜயகுமார். தீபக் குமார் பாதே ஒளிப்பதிவை கவனிக்க, சித்தார்த் விபின் இசையமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் புரூஷ் விஜயகுமார் கூறியதாவது:

இது பேண்டசி வித் காமெடி படமாக உருவாகியிருக்கிறது. மனிதருக்கும், இறைவனுக்கும் இடையே நடைபெறும் ஓர் உரையாடலை மையமாக வைத்து படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். படத்தில் இடம்பெறும் நட்சத்திரங்கள் வழக்கமான பாணியில் தோன்றாமல் வித்தியாசமாக தோற்றமளிப்பார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இது கம்ப்யூட்டர் காலத்திய திருவிளையாடல் என்றும் சொல்லலாம். இது ரசிகர்களை உற்சாகமடைய வைக்கும். என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in