ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கோல்ட் படத்தில் நடிகர் அக்ஷை குமார் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை பார்த்த அனைவரும், அக்ஷையின் தோற்றம் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாகவும், இத படத்தை பார்க்கும் ஆவலை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கோல்ட் படத்தை ரீமா காக்தி இயக்கி உள்ளார். எக்செல் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் டிவி நடிகையான மவுனி ராய் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுதந்திரம் பெற்ற பிறகு 1948 ம் ஆண்டு லண்டனில் நடந்த 14வது ஒலிம்பைடு விளையாட்டு போட்டியில் இந்தியா முதல் ஒலிம்பிக் தங்க பதக்கத்தை பற்றியது தான் கோல்ட் படத்தின் கதை. இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளது.