இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை படத்தில், மோடியின் வேடத்தில் நடிகர் அக்ஷை குமார் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நடிகர் பரேஷ் ராவல், மோடியின் வேடத்தில் அக்ஷை நடிக்கவில்லை என கூறினார்.
அவர் கூறுகையில், படத்திற்கான கதை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கதை தயாரிப்பின் சில பகுதிகள் முடிவடைந்து விட்டது. அடுத்த ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதத்தில் இப்படத்தின் வேலைகள் துவங்கப்படும். இப்படத்தில் நரேந்திர மோடி வேடத்தில் நான் தான் நடிக்க போகிறேன். இது எனது நடிப்பிற்கு மிகவும் சவாலான விஷயம். அவரது உடல்மொழிகளை அப்படியே நான் கொண்டு வர வேண்டும்.
அவரை போன்று பல பேரால் மிமிக் பண்ண முடியும். ஆனால் அவரை மிமிக் பண்ண நான் விரும்பவில்லை. அதனால் தான் இது எனக்கு மிகவும் கஷ்டமான விஷயம் என கூறினேன். இப்போதெல்லாம் பெரும்பாலும் நான் தினமும் அவரை பார்த்து, கவனித்து வருகிறேன். அதற்காக அவரை தினமும் சந்திக்க போகிறேன் என நீங்கள் நினைத்து விடக் கூடாது என்றார்.
நடிகர் பரேஷ் ராவல் தற்போது தனது புதிய படமான கெஸ்ட் இன் லண்டன் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படம் வரும் ஜூலை 7 ம் தேதி ரிலீசாக உள்ளது.