பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இந்தவாரம் (ஜூன்-30) மலையாள திரையுலகில் பிருத்விராஜ் நடித்த 'தியான்' படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின் அடுத்தவாரம் அதாவது ஜூலை-7ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதாக புதிய அறிவிப்பு வெளியானது. இதில் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனாலும் சென்சாரில் இன்னும் சில விஷயங்கள் முடியாமல் இழுத்தடிப்பதால் தவிர்க்க முடியாமல் இந்த வாரம் ரிலீசகவில்லை என சொல்லப்பட்டது. ஆனால் விநியோகஸ்தர்கள் தரப்பிலோ இதற்கு வேறு மாதிரி காரணம் சொல்கிறார்களாம்.
அதாவது இன்றுமுதல் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு அமலுக்கு வருவதால் தியேட்டர் கட்டணங்கள் உயர வாய்ப்பு இருக்கிறது என்பதாலும் இதனால் ஒருவேளை தியேட்டர்கள் தரப்பிலிருந்து போராட்டம் என (இதோ இப்போது தமிழ் சினிமாவில் அறிவித்துள்ளார்களே) கிளம்பிவிட்டால், படத்திற்காக இத்தனை நாட்கள் உழைத்த உழைப்பும் வீணாகி விடும், போட்ட முதலும் கூட தேறாது என்று நினைத்தே, இன்னும் ஒரு வாரத்திற்குள் எப்படியும் கட்டண முறை சரியாகிவிடும் என்பதால் ஜூலை-7ல் ரிலீஸ் செய்யலாம் என்றுதான் தள்ளிவைத்து விட்டார்களாம்.