தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா எனும் ஆபாச படத்தை எடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், சிம்புவை வைத்து ஏஏஏ என்ற படத்தை கொடுத்தார். சிம்புவுடன் ஸ்ரேயா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகளும் நடித்தனர். அதோடு, இந்த படத்தின் கதை நீளமாக இருப்பதால் இரண்டு பாகங்களாக வெளியாகயிருப்பதாக சொன்னார்கள்.
கடந்த வாரம் திரைக்கு வந்த ஏஏஏ கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. சிம்பு ரசிகர்களே திட்டும் அளவுக்கு ஏஏஏ படம் ஆபாசமாக இருந்தது. இதில் பாகம் இரண்டு வேறு வரும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தற்போதைய சூழலில் அது நடக்காது என்றே தெரிகிறது. இந்நிலையில், அடுத்தபடியாக மீண்டும் தனது முதல் படநாயகனான ஜி.வி.பிரகாசுடன் ஆதிக் ரவிச்சந்திரன் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது எப்படி இருக்க போகிறதோ...?