Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வரி விதிப்புகள், வாயைத் திறக்காத ரஜினிகாந்த்

01 ஜூலை, 2017 - 11:44 IST
எழுத்தின் அளவு:
Rajini-keeps-silent-on-GST

இந்த நாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் உடனே ரஜினிகாந்த் என்ன சொன்னார் ?, கமல்ஹாசன் என்ன கருத்து தெரிவித்தார் என்றுதான் அனைவரும் கேள்வி கேட்பார்கள். ஜல்லிக் கட்டுப் பிரச்சனையின் போது கூட கமல்ஹாசன் அடிக்கடி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதே போல, ஜிஎஸ்டி வரி விதிப்பு பற்றி கமல்ஹாசன் தொடர்ந்து தன்னுடைய கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார். அதே சமயம் ரஜினிகாந்த் இது பற்றி இதுவரை எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை.

மற்ற பொதுப் பிரச்சனைகளுக்காகக் கூட ரஜினிகாந்த் வாயைத் திறக்கவில்லை என்றால் பரவாயில்லை. ஜிஎஸ்டி பிரச்சனை அவர் இருக்கும் திரையுலகத்திற்கும் சேர்த்த பிரச்சனைதான். தமிழ்த் திரையுலகத்தில் பல ஆண்டுகாலமாகவே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெயரைப் பெற்றிருப்பவர். அவர் சார்ந்த துறையில் பலர் தவித்துக் கொண்டிருக்கும் போது இதுவரை அவர் எதுவுமே சொல்லாமல் இருப்பது பலரையும் கோபப்பட வைத்துள்ளது.

ஒரு வேளை இந்த ஜிஎஸ்டி மற்றும் நகராட்சி வரி விதிப்பு ஆகியவற்றைப் பற்றி முன்கூட்டியே தெரிந்துதான் அதிலிருந்து தப்பிக்க அவர் அமெரிக்கா சென்றுவிட்டாரோ என்று திரையுலகில் சிலர் குரல் எழுப்புகிறார்கள்.

திரையுலகத்திற்குண்டான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தால் அது இந்திய அளவில் எதிரொலித்திருக்கும், ஆனால், அவர் அதைச் செய்யவில்லை என்றும் அவர் மீது குற்றம் சாட்டுகிறார்கள். தான் சார்ந்த துறைப் பிரச்சனையைப் பற்றியே குரல் கொடுக்காதவர் அரசியலுக்கு வந்தால் மக்களின் பிரச்சனைகளுக்கு எப்படி குரல் கொடுப்பார் என்றும் கேள்வி கேட்கிறார்கள்.

Advertisement
சந்தீப், ரெஜினா நடித்த தெலுங்கு படம் தமிழில் வெளிவருகிறதுசந்தீப், ரெஜினா நடித்த தெலுங்கு படம் ... திடீர் தியேட்டர் ஸ்டிரைக், பாதிக்கப்படும் படங்கள் திடீர் தியேட்டர் ஸ்டிரைக், ...


வாசகர் கருத்து (14)

SHASHI - bangalore,இந்தியா
02 ஜூலை, 2017 - 06:35 Report Abuse
SHASHI தமிழ் நட்டு மக்களுக்கு தெரியும் .... யார் எப்படி பட்டவர்கள் என்று ... ரஜினி சார் சிறந்தவர் ....
Rate this:
Tamilan - Chennai,இந்தியா
01 ஜூலை, 2017 - 18:14 Report Abuse
Tamilan குரல் கொடுத்தால் மட்டும் மத்திய அரசு அப்படியே கேட்டு விடுவார்களாக்கும். கமல் அவசரப்பட்டு மீடியா மூலம் அணுகாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். நடிகர் சங்கம் என்ன செய்கிறது அவர்கள் அல்லவா அனைத்து நடிகர்களையும் அழைத்து தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும். அனைத்து திரைப்பட துறையினரையும் கூட்டி ஒன்றாக அரசை அணுகி இருந்தால் சரியான பதில் கிடைத்திருக்கும். ஆனால் இனி வரி விளக்கு எல்லாம் கிடைக்கும் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. வரியை குறைக்க இந்திய அளவில் நடிகர் மற்றும் திரைப்பட துறையினர் ஒன்றாக கூடி குரல் கொடுத்தால் பலன் இருக்கும். அதை விடுத்து ரஜினி சும்மா இருக்கிறார் அஜீத் சும்மா இருக்கிறார், என்று பேச தேவை இல்லை.
Rate this:
Arun - Chennai,இந்தியா
01 ஜூலை, 2017 - 15:19 Report Abuse
Arun படம் வெளிவரும் போது கண்டிப்பாக குரல் கொடுப்பர், அதுவரை மக்கள் அனைவரும் சற்று பொறுமை காக்கவும்...
Rate this:
Raj Kumar - chennai,இந்தியா
01 ஜூலை, 2017 - 15:03 Report Abuse
Raj Kumar ரஜினி தில் இல்லாத மதில் மேல் பூனை. ரஜினி திரை உலகில் இருப்பது கூட தெரியாத ரஜினி ரசிகர்கள் எதுக்கு எதுக்கெடுத்தாலும் ரஜினிவே இழுக்கிறீங்க கேட்கறது வெட்கக்கேடு .
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
01 ஜூலை, 2017 - 14:58 Report Abuse
Vaal Payyan போர் வரட்டும் ... இவரை நம்பி நீங்க அரசியலுக்கு வாங்க , சிஸ்டம் மாத்துங்க , சமூகத்திற்கு நல்லது பண்ணுங்க அப்படி இப்படி னு விசில் அடிச்சான் குஞ்சுகள் முழக்கம் போட்டுட்டு இருக்கு , நடிப்பு வேறு நிஜம் வேறு ... புரிஞ்சோக்கோ மக்கா
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in