Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜிஎஸ்டி... திங்கள் முதல் திரையரங்குகள் மூடல் : அபிராமி ராமநாதன்

30 ஜூன், 2017 - 18:32 IST
எழுத்தின் அளவு:
GST-:-TN-Theatres-announce-strike-from-monday

ஜிஎஸ்டி குறித்து தமிழக அரசு தெளிவான முடிவு எடுக்காவிட்டால் திங்கள் கிழமை (ஜூலை 3) முதல் காலவரையின்றி தியேட்டர்கள் மூடப்படும் என அபிராமி ராமநாதன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே வரி என்கிற அடிப்படையில் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி அமலாகிறது. ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு ரூபாய் 100-க்கு கீழ் டிக்கெட் வசூலிக்கும் திரையரங்குகள் 18 சதவிகித வரியும், ரூபாய் 100-க்கு மேல் டிக்கெட் வசூலிக்கும் திரையரங்குகள் 28 சதவிகித வரியும் கட்ட வேண்டி இருக்கும்.

இதுதவிர நகராட்சி வரி 30 சதவீதம் வரை விதிக்கப்படலாம் என்ற கருத்து தமிழக தியேட்டர் வட்டாரங்களில் நிலவுகிறது. அப்படி வரி விதிக்கப்பட்டால் டிக்கெட் கட்டணங்கள் 200 ரூபாய் வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. சினிமா டிக்கெட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இதனால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் முன்பதிவு எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில் தமிழ் திரைப்பட வர்த்தகசபையின் அவசரக்கூட்டம் தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் சென்னையில் நடந்தது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், "ஜிஎஸ்டி விவகாரத்தில் தமிழக அரசு ஒரு தெளிவான முடிவு எடுக்கவில்லை. லோக்கல் வரி மற்றும் ஜிஎஸ்டி சேர்ந்தால் கிட்டத்தட்ட 53 முதல் 64 சதவீதம் வரை வரி செலுத்த நேரிடம். இதன்காரணமாக டிக்கெட் கட்டணம் உயரும், பொதுமக்கள் தான் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். இப்படியொரு நிலை வந்தால் நிச்சயம் தியேட்டரை ஓட்ட முடியாது. ஆகையால், இந்த விவகாரத்தில் தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறேன். இல்லையென்றால் திங்கள்(ஜூலை 3) முதல் காலவரையின்றி தியேட்டர்கள் மூடப்படும். அதுவரை சனி மற்றும் ஞாயிறுகளில் தற்போதைய கட்டணமே வசூலிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
தணிக்கை சான்று பெறுவதை எளிமையாக்குங்க : விஷால் கோரிக்கைதணிக்கை சான்று பெறுவதை ... அரசியல் கைவிட்டாலும், சினிமா என்னை கைவிடாது! - ஆனந்தராஜ் அரசியல் கைவிட்டாலும், சினிமா என்னை ...


வாசகர் கருத்து (40)

arumugam subbiah - Tirunelveli,இந்தியா
01 ஜூலை, 2017 - 11:02 Report Abuse
arumugam subbiah திரை அரங்குகளில் பங்கு பெரும்பான்மையினரால் கருதப்படுவது பொழுது போக்கிற்க்காக மட்டுமே. அதற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கும் தினமலர் தமிழகம் mattrum தமிழர்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கும் கதிராமங்கலம், நெடுவாசல் ஆதரவாக தொடர்ந்து நடக்கும் போராட்டங்களையும், நேற்றய 30.06.2017 போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஜர் நல்லதுரை காவல் துறையால் தாக்கப்பட்டதையும் தொடர்ந்து நடந்த தாக்குதலால் பொது மக்கள் துரத்தி அடிக்கப்பட்டதையும் ஒரு சில ஊடகங்கள் வெளியிட்டாலும் தினமலர் போன்ற பல ஊடகங்கள் அதை கண்டுகொள்ளாததன் மர்மம் என்ன? தமிழுக்கும், ஆன்மிகத்திற்கும் தொண்டு செய்யும் தினமலர் இது போன்ற மக்கள் நலன் சார்ந்த வாழ்வாதார விடயங்களில் ஒதுங்கி நிற்பதன் மர்மம் என்ன?
Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
01 ஜூலை, 2017 - 10:53 Report Abuse
 ஈரோடுசிவா சினிமா தியேட்டர்களை ஒரேயடியாக மூடிவிட்டால் நல்லது... நாடு முன்னேறும் ... குறைந்த பட்சம் பகல் காட்சிகளையாவது தடை செய்ய வேண்டும்.... போய்ப்பாருங்க ...தியேட்டர் வாசல்ல...கிளாசுக்குக் கட்டடிச்சுட்டு எத்தனை மாணவக் கண்மணிகள் தியேட்டர் இருட்டில் காதலை வளர்க்கிறார்கள் என்று....
Rate this:
ramaraj -  ( Posted via: Dinamalar Android App )
01 ஜூலை, 2017 - 10:33 Report Abuse
ramaraj இதை இன்னும் எவ்ளோ நாள்களுக்கு சொல்லாப் போகிறீர்கள்.. நடிகர்,நடிகை மற்றும் இயக்குநர் சம்பளத்தை 70 சதவீதம் குறைத்தால் டிக்கட் விலை 30 ஆக இருக்கும்..
Rate this:
christ - chennai,இந்தியா
01 ஜூலை, 2017 - 10:31 Report Abuse
christ இரட்டை அர்த்த வசனங்களையும் , ஆபாசத்தையும் புகுத்தி தரம் கெட்ட சினிமாவை காண்பித்து சமூகத்தில் ஒழுக்கத்தை சீரழிக்கும் திரை அரங்குகள் தங்களை நிரந்தரமாக மூடிவிட்டால் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்
Rate this:
Sridhar - Singapore,சிங்கப்பூர்
01 ஜூலை, 2017 - 10:21 Report Abuse
Sridhar Romba nallatha pochu..
Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in