மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
சல்மான் கான் நடித்து வெளிவரும் படம் என்றாலே வசூலுக்கு உத்தரவாதம் தரும் படமாக இருக்கும் என்பதுதான் சமீப காலங்களில் நடந்த விஷயமாக இருந்தது. கொஞ்சம் தன்னுடைய பாணியை மாற்றி நடிக்கலாம் என 'டியூப்லைட்' படத்தில் நடித்த சல்மானுக்கு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளனர். அவரை இது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை ரசிகர்கள் விரும்பவில்லை என்பதே 'டியூப்லைட்' படத்தின் தோல்விக்கான உண்மையான காரணம்.
படம் வெளிவந்த ஒரு வாரத்தில் வெறும் 100 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. சல்மான் படம் என்றால் 100 கோடியை குறைந்த பட்சம் மூன்று நாட்களில் வசூலித்துவிடும் என அவருடைய ரசிகர்களும் பெருமைபட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த தோல்வியை சல்மான் கூட சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
படம் வெளிவருதவற்கு முன்பு இந்த படத்திற்கு மைனஸில் கூட விமர்சகர்கள் ரேட்டிங் கொடுப்பார்கள் என நக்கலடித்தார் சல்மான். அவர் சொன்னது போலவே மைனஸில் கொடுக்கவில்லை என்றாலும் படத்தின் வசூல் மைனஸோ மைனஸ் ஆகிவிட்டது. படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் பலருக்கும் கடும் நஷ்டம் ஏற்படும் என்று சொல்கிறார்கள். அதிலும் கடந்த இரண்டு நாட்களில் வசூல் மிகவும் மோசமாக இருந்ததாம். அடுத்த சில நாட்களில் படத்தை தியேட்டரை விட்டே தூக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வினியோகஸ்தர்கள் புலம்புகிறார்களாம்.
'பாகுபலி 2' வசூலை ஒரு கை பார்த்துவிடலாம் என நினைத்தார் சல்மான். ஆனால், டியூப்லைட் ஒரு வாரத்திற்குள்ளாகவே 'ஃபியூஸ்' போய்விட்டது.