'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு சினிமாவின் பிரபல ஹீரோ, அதேசமயம் நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பது என சபதம் எடுத்து சதம் அடித்த ஹீரோ தான் பாலகிருஷ்ணா. தற்போது இவர் நடித்துவரும் 101வது படமான 'பைசா வசூல்' முடிந்து போஸ்ட் புரொடக்சனில் இருக்கிறது. இதை தொடர்ந்து இவரது 102வது படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார் என்பது ஏற்கனவே தெரிந்த செய்திதான். லேட்டஸ்ட் தகவலாக தெலுங்கு சினிமாவின் ஹீரோவாக இருந்து தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஸ்ரீகாந்த்தை இந்தப்படத்தில் வில்லனாக்கியுள்ளார் பாலகிருஷ்ணா.
இதற்கு முன் கதாநாயகனாக நடித்து மார்க்கெட் இறங்கிய நிலையில் தத்தளித்துக் கொண்டு இருந்த ஜெகபதிபாபுவை தனது 'லெஜென்ட்' படத்தில் வில்லனாக்கி அவரது இரண்டாவது இன்னிங்சை சுறுசுறுப்பாக துவக்கி வைத்தவர் இதே பாலகிருஷ்ணா தான். தற்போது அதேபோன்றதொரு நிலையில் தற்போது இருக்கும் 'ஸ்ரீகாந்தையும் இந்த புதிய படத்தில் வில்லனாக்கி இருப்பதன் முலம் அவருக்கும் ஒரு புதிய இன்னிங்சை ஆரம்பித்து வைக்க இருக்கிறார் பாலையா.