'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள சினிமாவில் இளம் முன்னணி இயக்குனர் வினீத் சீனிவாசன்.. நடிகர் சீனிவாசனின் மகனான இவர் தனது தந்தையைப்போலவே நடிப்பு, டைரக்சன், கதாசிரியர் என எல்லா ஏரியாவிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். நடிகர் நிவின்பாலியை சினிமாவில் அறிமுகப்படுத்தியதிலும், தொடர்ந்து அவருக்கு பக்கபலமாக நின்று அவ்வப்போது அவரை வைத்து வெற்றிப்படங்களை இயக்கி நிவின்பாலியின் கேரியரை உயர்த்தியதிலும் வினீத் சீனிவாசனின் பங்கு ரொம்பவே அதிகம். இவர் நடித்துள்ள 'ஒரு சினிமாக்காரன்' படம் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது..
இந்தநிலையில் இன்று காலை வினீத் சீனிவாசனின் மனைவி திவ்யா அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். வினீத் சீனிவாசனும் திவ்யாவும் சென்னையில் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.. எட்டு வருடமாக காதலித்து கடந்த 2012ல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
கடந்த இரண்டு மாதங்களுக்குள் வினீத் சீனிவாசனின் சக நண்பர்களான துல்கர் சல்மான் (மே-5), நிவின்பாலி (மே-25), ஆசிப் அலி (ஜூன்-2) ஆகியோர் பெண்குழந்தைக்கு தந்தையான நிகழ்வு நடந்தது.