'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க இயக்குனர் அன்வர் ரஷீத். ஒரு தயாரிப்பாளராகவும் மாறி 'பெங்களூர் டேய்ஸ்' மற்றும் 'பிரமேம்' என சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். அதேசமயம் 2012ல் துல்கரை வைத்து இயக்கிய 'உஸ்தாத் ஹோட்டல்' படத்திற்கு பிறகு அடுத்ததாக படம் இயக்குவதையே மறந்துவிட்டார் என்றே சொல்லலாம். தற்போது ஐந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் டைரக்சன் தொப்பியை எடுத்து அணிந்துள்ளார் அன்வர் ரஷீத்.
படத்தின் பெயர் 'ட்ரான்ஸ்'. ஹீரோவாக பஹத் பாசில் நடிக்கிறார். ஆஸ்கர் வின்னர் ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனராக பணியாற்றவுள்ளார். இயக்குனர் அமல்நீரத் இந்தப்படத்திற்காக மீண்டும் கேமராமேன் நாற்காலியில் அமர்ந்துள்ளார். இதில் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இந்தப்படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கவும் உள்ளார். ஏற்கனவே, 'பிரேமா', 'சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது' ஆகிய படங்களில் அல்போன்ஸ் புத்ரன் சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டியுள்ளார்.