‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக பல்கேரியா நாட்டில் அதிகமாக நடைபெற்றது. தொடர்ந்து அங்கு நடந்து வந்த படப்பிடிப்பு நிறைவடைந்து ஓரிரு வாரங்களுக்கு முன்பு படக்குழுவினர் சென்னை திரும்பினர்.
தற்போது விடுபட்ட சில காட்சிகளை படம் பிடிப்பதற்காக அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் செர்பியா நாட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு நடைபெறும் படப்பிடிப்பு பற்றி படத்தின் இயக்குனர் சிவா புகைப்படத்துடன் தகவலை வெளியிட்டுள்ளார்.
'விவேகம்' டீசர், 'சர்வைவா' சிங்கிள் பாடல் ஆகியவை வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட உள்ளார்கள். அதற்கு முன்னதாக ஜுலை மாதத்தில் படத்தின் டிரைலரும், பாடல்களும் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
'விவேகம்' படம் அஜித்தின் முந்தைய பட சாதனைகளை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பில் படத்திற்கான வியாபாரமும் இதுவரை இல்லாத அளவிற்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.