ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
போகன் படத்திற்கு பிறகு தமிழில் ஹன்சிகா கமிட்டாகயிருந்த சில படங்கள் கடைசி நேரத்தில் நழுவிப்போய் விட்டன. அதனால் அதிர்ச்சியடைந்த அவர், தெலுங்கில் கவனத்தை திருப்பியவர், லக்னோடு, கெளதம் நந்தா ஆகிய படங்களில் நடித்து வந்தார். அதோடு, மலையாள சினிமா பக்கமே திரும்பாமல் இருந்து வந்த ஹன்சிகா, முதன்முறையாக மோகன்லால் நடிக்கும் வில்லன் படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க கமிட்டானார்.
இந்த நிலையில், பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல் படத்தில் நடித்த ஹன்சிகா, தற்போது பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள குலேபகாவலி படத்தில் நாயகியாக நடித்துள்ளார். வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் இந்த படத்தில் காமெடி கலந்த பர்பாமென்ஸ் கொடுத்துள்ள ஹன்சிகா, எமோசனல் காட்சிகளிலும் அழுத்தமான பர்பாமென்ஸை வெளிப்படுத்தியிருக்கிறாராம். இதை பார்த்த பிரபுதேவா, ஹன்சிகாவுக்கு இன்னும் அதிக நம்பிக்கை கொடுத்து ஊக்குவித்திருக்கிறார்.