Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜிஎஸ்டி எதிரொலி : டிக்கெட் முன்பதிவுகள் நிறுத்தம்

30 ஜூன், 2017 - 12:17 IST
எழுத்தின் அளவு:
Ticket-Booking-stopped-due-to-GST

ஜுலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்கள் அதிகரிக்க உள்ளன. மாநகரங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் சராசரியாக 120 ரூபாய் இருக்கும் கட்டணங்கள் 153 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

இது ஜிஎஸ்டி வரியைச் சேர்த்து மட்டுமே கணக்கிடப்பட்ட கட்டணம். ஆனால், நகராட்சி வரி 30 சதவீதம் வரை விதிக்கப்படலாம் என்ற கருத்து தியேட்டர் வட்டாரங்களில் நிலவுகிறது. அப்படி வரி விதிக்கப்பட்டால் டிக்கெட் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும். அது பற்றிய தெளிவான விவரங்கள் தியேட்டர்காரர்களுக்கு தெரியாத காரணத்தால் ஆன்லைனில் நாளை மற்றும் அதற்கு அடுத்த நாட்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளங்கள், முன்னணி தியேட்டர்களின் இணையதளங்கள் இன்று மட்டுமே ஆன்லைன் டிக்கெட் முன்பதிவைக் காட்டுகின்றன. இதனால், நாளை, நாளை மறுதினம் விடுமுறை நாட்களில் படங்களைப் பார்க்க முன்பதிவு செய்பவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று வெளியாகும் படங்களின் வசூல் மிகவும் பாதிக்கப்படக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

திரையுலகத்தைச் சேர்ந்த சங்கங்கள் பல முறை இது பற்றி வேண்டுகோள் விடுத்தும் அவர்களுக்கு இன்னும் விவரமான பதில் வரவில்லை என்றே தெரிவிக்கிறார்கள். இன்று மாலைக்குள் தமிழ்நாடு அரசிடமிருந்த இது குறித்த ஆணை வெளியிடப்படலாம் என்கிறார்கள்.

Advertisement
ஹிந்தியில் டப்பிங் பேசும் ரஜினிஹிந்தியில் டப்பிங் பேசும் ரஜினி ஹன்சிகாவுக்கு நம்பிக்கை கொடுத்த பிரபுதேவா ஹன்சிகாவுக்கு நம்பிக்கை கொடுத்த ...


வாசகர் கருத்து (5)

மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
30 ஜூன், 2017 - 17:45 Report Abuse
மலரின் மகள் ஆன் லைனில் டிக்கெட் எல்லாம் எடுப்பதில்லை. ஆன்லைனிலேயே பார்த்து விடுகிறோம். பிரச்சினை ஒன்றும் இல்லை.
Rate this:
Ramesh Kumar - coimbatore,இந்தியா
30 ஜூன், 2017 - 16:16 Report Abuse
Ramesh Kumar GST யின் தாக்கம் இனி ஒவ்வொன்றாக வெளியே வரும்.....
Rate this:
kumar - Madurai,இந்தியா
30 ஜூன், 2017 - 15:57 Report Abuse
kumar நாடு உருப்படட்டும்.
Rate this:
Appu - Madurai,இந்தியா
30 ஜூன், 2017 - 15:19 Report Abuse
Appu ஓகே...நோ பிராப்லம்...தியேட்டருக்கு போனால் தானே...இனி திருட்டு விசிடி ஆன்லைன் மூவி பார்த்துக்கொள்ளவேண்டியது தான்...
Rate this:
Sankarm Sankar - Chennai,இந்தியா
30 ஜூன், 2017 - 13:53 Report Abuse
Sankarm Sankar இனி CD தான், தியேட்டர் எல்லாம் சரி பட்டு வராது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sakka Podu Podu Raja
    Tamil New Film Kodiveeran
    • கொடிவீரன்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : மகிமா ,சனுஷா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film Nimir
    • நிமிர்
    • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
    • நடிகை : பார்வதி நாயர்
    • இயக்குனர் :ப்ரியதர்ஷன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in