தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினி நடித்த சில படங்கள் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் 2.ஓ படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் அக்சய்குமாரும் நடித்திருப்பதால் ஹிந்திக்கும் தமிழைப்போலவே கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். படத்தின் பர்ஸ்ட் லுக்கை கூட மும்பையில் வெளியிட்டவர்கள், அடுத்தபடியாக ஆடியோ மற்றும் படம் வெளியாகும் நேரத்தில் மும்பை சென்று புரமோஷன்களிலும் ஈடுபடப் போகிறார்களாம்.
இந்த நிலையில், 2.ஓ படத்தை அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் காலா படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. முக்கியமாக காலா படத்தில் ஹிந்தி பதிப்பின் கதையில் சில மாற்றங்களை செய்வதோடு, அந்த படத்தில் ரஜினியே தனக்கு டப்பிங் பேசப்போகிறாராம்.