தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடல் படத்தின் மூலம் அறிமுகமானாலும், லேட்டஸ்டாக வெளியான ரங்கூன் படம் தான், கவுதம் கார்த்திக்கின் திறமையை, ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இதனால் உற்சாகத்தில் இருக்கிறார் கவுதம். இந்த உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில், இவன் தந்திரன் படம், இன்று வெளியாகிறது.
ஆக் ஷன், காமெடி, காதல் கலந்த இந்த படமும், தனக்கு வெற்றியைத் தேடி தரும் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் கவுதம், இனிமேல், பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, முடிவெடுத்துள்ளாராம். சமீபத்தில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து, அவர் கூறிய விஷயங்களை வேறு மாதிரியாக திரித்து செய்தியாக்கி விட்டனராம்; அதனால் தான், இந்த உஷார் நிலை.