இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மின்சாரக் கனவு படத்தில் இடம் பெற்ற வெண்ணிலவே..வெண்ணிலவே.. பாடலை இன்றைய ரசிகர்களும் கேட்டு ரசிப்பார்கள். வெறும் கண்களாலேயே காதல் பார்வையைக் கடத்தி அப்போதைய இளம் ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் கஜோல். அந்த ஒரு படத்துடன் தமிழில் நடித்தது போதும் என்று போய்விட்டாரரோ என்னமோ. அதன் பின் ஹிந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்தது தனிக் கதை.
20 வருடங்கள் கழித்து மீண்டும் வேலையில்லா பட்டதாரி 2 படம் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி ஆகியிருக்கிறார். இப்படத்தின் டீசர் வெளிவந்த போதே எங்கே அதில் கஜோலைக் காணவில்லை என அவருடைய ரசிகர்கள் கேட்டு அதிர்ச்சியடைய வைத்தனர். நல்ல வேளையாக கடந்த வாரம் வெளியான டிரைலரில் கஜோல் இடம் பெற்றுவிட்டார். மிகப் பெரும் கோடீசுவரியாக, கார்ப்பரேட் கம்பெனி முதலாளியாக கஜோல் நடித்திருக்கிறார் என்பது மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.
ஹிந்தியில் பிரபலமாக இருந்த ஒரு ஹீரோயின், குழந்தைகளைப் பெற்ற பிறகும் 20 வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமில்லை. இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கஜோல், ”எனக்குள் இருந்த மற்ற மொழிகளில் நடிக்க முடியாது என்ற ஃபோபியாவை தனுஷும் சௌந்தர்யாவும் நீக்கிவிட்டார்கள், என்று பெருமையாகக் கூறினார்.
விஐபி 2 படத்தில் கஜோலிடமிருந்து காதல் பார்வையைப் பார்க்க வாய்ப்பில்லை. அதே சமயம் கலக்கலான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அவரைப் பார்க்கலாம். கஜோலின் ரீஎன்ட்ரி விஐபி 2க்கு மேலும் ஒரு அந்தஸ்தைக் கொடுக்கும் என்பது மட்டும் நிச்சயம்.