'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |
சிவகார்த்திகேயன் தன்னுடைய பெயரில் தொடங்கிய '24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்' பட நிறுவனம் தயாரித்த 'ரெமோ' படத்தை அடுத்து, 'வேலைக்காரன்' படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை விஜய் டி.வி. 16 கோடிக்கு வாங்கியது. ரெமோ படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 8 கோடிக்குத்தான் விற்கப்பட்டது. வேலைக்காரன் படத்துக்கு 16 கோடி கொடுக்கப்பட்டதும் சேனல் வட்டாரங்கள் அதிர்ச்சியுற்றன. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்க பொன்ராம் இயக்கும் படத்தின் சாட்லைட் ரைட்ஸை மற்றொரு தனியார் டிவி வாங்கியுள்ளது. இதனை தயாரிப்பு தரப்பினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் பொன்ராமும் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 16-ஆம் தேதி துவங்கியது. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' வெற்றிக் கூட்டணியான சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படம் என்பதால் இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் நிச்சயமாக 20 கோடியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
விஜய் டிவியின் செல்லப்பிள்ளையான சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்தப் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை வேறு சேனலுக்குக் கொடுத்தது ஏன் என்று தெரியவில்லை. அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு விற்றாரா? அல்லது விஜய் டிவியுடன் மனஸ்தாபமா?