Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் மகனை ரசிகர்களை ஏற்றுக்கொள்வார்கள் -தம்பி ராமைய்யா

28 ஜூன், 2017 - 14:28 IST
எழுத்தின் அளவு:
Thamabi-ramaiah-about-his-son-entre-into-cinema

வாரிசு நடிகர்கள் சினிமாவில் என்ட்ரி கொடுப்பது புதிய விசயமல்ல. விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்திக் என பல வாரிசு நடிகர்கள் சினிமாவில் வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இணையப்போகும் இன்னொரு நடிகர்தான் உமாபதி ராமைய்யா. பிரபல குணசித்ர நடிகர் தம்பி ராமைய்யாவின் வாரிசு இவர். ஜூன் 30-ந்தேதி திரைக்கு வரும் அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தில் இவர் அறிமுகமாகிறார்.

முன்னதாக, இந்த படத்தில் தனது மகனின் நடனம், நடிப்பு குறித்து தான் நடித்து வரும் படங்களின் ஹீரோக்களிடம் பெருமையாக பேசி வருகிறார் தம்பி ராமைய்யா. அப்போது மற்ற நடிகர்களின் படங்களுக்கு பலமாக இருக்கும் நீங்கள் உங்கள் மகன் நடித்துள்ள படத்தில் ஏன் நடிக்கவில்லை? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.


அதற்கு தம்பி ராமைய்யா, என் மகனுக்கு அப்பாவாக இந்த படத்தில் என்னை தான் டைரக்டர் இன்பசேகரன் நடிக்க சொன்னார். ஆனால், இதுகுறித்து நான் டைரக்டர் பிரபுசாலமனிடம் கேட்டபோது, நீங்கள் நடித்தால் உங்கள் நடிப்பு உங்கள் மகனின் நடிப்பை மறைத்து விடும். தனியாக நடித்தால்தான் அவர் ஜொலிப்பார் என்று கருத்து சொன்னார். அதன்காரணமாகவே நான் இந்த படத்தில் நடிக்கவில்லை. மேலும், நடனம், நடிப்பு இரண்டிலுமே இந்த படத்தில் என் மகன் உமாபதி கலக்கியிருக்கிறார். அதனால் கண்டிப்பாக அவரை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார் தம்பி ராமைய்யா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in