இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள படம் ஸ்பைடர். தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடி வடைந்து விட்டது. இரண்டு பாடல்கள் மட்டுமே பேலன்ஸ் உள்ளது. இப்படம் செப்டம்பரில் திரைக்கு வருவதும் உறுதி செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில், ஜூன் 21-ந்தேதி முதல் தனது புதிய படமான பாரத் அனி நேனு படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் மகேஷ்பாபு. ஐதராபாத் பேகம்பேட்டில் உள்ள பைகாஹ் அரண்மனையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் மகேஷ்பாபு சம்பந்தப்பட்ட ஓப்பனிங் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்படுகிறது.
இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். பிரபல இந்தி நடிகை ஜூஹி சாவ்லாவின் உறவுக்கார பெண்ணான இந்த கியாரா அத்வானி, இந்தியில் வெளியான புக்ளி, எம்எஸ் டோனி அன் டோல்டு ஸ்டோரி போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர். அதன் காரணமாகவே மகேஷ்பாபு படத்தில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறாராம் கியாரா அத்வானி.